இந்த தனியுரிமை அறிக்கையானது தரவைச் சேகரித்து இந்த விதிகளைக் காட்சிப்படுத்தக்கூடிய Microsoft வலைத்தளங்கள், சேவைகள் மற்றும் தயாரிப்புகளுக்குப் பொருந்துவதாகும், அதோடு அவற்றின் ஆஃப்லைன் தயாரிப்பு உதவிச் சேவைகளுக்கும் பொருந்துகின்றது. இந்த தனியுரிமை அறிக்கையைக் காண்பிக்காத அல்லது இதற்கான இணைப்பைக் கொண்டில்லாமல் அவற்றுக்கு என தனிப்பட்ட தனியுரிமை அறிக்கைகளைக் கொண்டுள்ள பிற எந்த Microsoft தளங்கள் மற்றும் சேவைகளுக்கும் இது பொருந்தாது.
கீழே உள்ள தொகுப்புரைகளைப் படித்து ஒரு குறிப்பிட்ட தலைப்பு பற்றிய கூடுதல் விபரங்களுக்கு "Learn More" என்பதில் கிளிக் செய்யவும். அத்தயாரிப்பின் தனியுரிமை அறிக்கையைக் காண மேலே பட்டியலிடப்பட்டுள்ள தயாரிப்புகளில் இருந்தும் நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சில தயாரிப்புகள், சேவைகள் அல்லது சிறப்பம்சங்கள் எல்லா சந்தைகளிலும் கிடைக்காமல் போகலாம். தனியுரிமை அறிக்கையைப் பாதுகாப்பதற்கான Microsoftஇன் ஈடுபாடு பற்றிய கூடுதல் விபரங்களுக்கு http://www.microsoft.com/privacy செல்லவும்.
மைக்ரோசாஃப்ட் அட்வர்டைசிங் “குக்கீகளை” பயன்படுத்துகின்றது, குக்கீகள் என்பவை அவை உருவாகும் டொமைனில் உள்ள வெப் சர்வரால் படிக்கப்படக் கூடிய, உங்கள் வன் தட்டில் வைக்கப்படும் சிறிய டெக்ஸ்ட் கோப்புகளாகும். உங்களது விருப்பங்களையும் அமைத்தல்களையும் சேமிப்பதற்கு; உள்நுழைவு சார்ந்து உதவி பெறுவதற்கு; இலக்கு விளம்பரங்களை வழங்குவதற்கு; மற்றும் தள நடவடிக்கைகளை பகுப்பாய்வதற்கு நாம் குக்கீஸ் பயன்படுத்தலாம்.
மேலும் உங்கள் உலவி கட்டமைப்புகளை சிறப்பாக புரிந்துகொள்ளவும், பகுப்பாய்வை தொகுக்கவும் வெப் பீக்கோன்களை நாங்கள் பயன்படுத்தலாம். இவை எங்கள் கொள்கைகள் மூலம் உங்கள் தனிப்பட்ட விவரங்கள் சேகரிக்கப்படுவதைத் தடுக்கக்கூடிய மூன்றாம் நிலை வெப் பீக்கோன்களை உள்ளடக்கியிருக்கக் கூடும்.
குக்கீஸ் மற்றும் அதுபோன்ற தொழில்நுட்பங்களை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு கருவிகள் உள்ளன. அவற்றுள் அடங்குபவை:
குக்கீகளின் பயன்பாடு
பெரும்பாலான மைக்ரோசாஃப்ட் வலைத்தளங்கள் “குக்கீஸ்” பயன்படுத்துகின்றன; இவை, ஒரு வெப் செர்வரால் உங்கள் ஹார்டு டிஸ்க்கில் சேமித்து வைக்கப்படும் சிறிய உரைக் கோப்புகள். குக்கீகளில், உங்களுக்கு குக்கீயை வழங்கிய டொமைனில் உள்ள ஒரு வலை சர்வரால் பின்னர் வாசிக்கப்படக்கூடிய தகவல் உள்ளது. அந்த உரையில் பெரும்பாலும் எண்கள் மற்றும் எழுத்துக்களின் ஒரு தொடர்ச்சொல் இருக்கும்; அது உங்கள் கணினிக்கு தனிப்பட்ட அடையாளம் வழங்கும்; எனினும், அதில் வேறு தகவல்களும் இருக்கலாம். எங்கள் இணையதளங்களில் ஒன்றை நீங்கள் பார்வையிடும்போது உங்கள் வன் தட்டில் மைக்ரோசாஃப்ட் பதிக்கும் ஒரு குக்கீயில் சேமிக்கப்பட்டிருக்கும் உரைக்கான ஒரு எடுத்துக்காட்டு: E3732CA7E319442F97EA48A170C99801
நாங்கள் இவற்றிற்காக குக்கீகளை பயன்படுத்தலாம்:
நாங்கள் பொதுவாக பயன்படுத்தும் குக்கீகளில் சில பின்வரும் விளக்க வரைபடத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த பட்டியல் முழுமையானது அல்ல, ஆனால் நாங்கள் குக்கீகளை அமைக்கும் காரணங்களில் சிலவற்றை விளக்கும் நோக்கத்தில் அமைந்தவை ஆகும். எங்கள் இணைய தளங்களில் ஒன்றிற்கு நீங்கள் வருகை தந்தால், தளத்தில் பின்வரும் குக்கீகளில் சில அல்லது அனைத்தும் அமைக்கப்படலாம்:
குக்கீகளுடன் கூடுதலாக, மூன்றாம் நிலை விளம்பரதாரர்கள் அல்லது விளம்பர அமைப்புகள் ஆகியவையும் நீங்கள் மைக்ரோசாஃப்ட் தளங்களுக்கு வருகை செய்யும்போது மைக்ரோசாஃப்ட் உங்கள் வன் தட்டில் குக்கீகளை இடலாம். சில சூழ்நிலைகளில் இதற்குக் காரணம், எங்கள் சார்பாக தளப் பகுப்பாய்வு போன்ற சில குறிப்பிட்ட சேவைகளை வழங்குவதற்காகநாங்கள் மூன்றாம் தரப்பினரை பணியமர்த்தியுள்ளோம். இதர சூழ்நிலைகளில் இதற்குக் காரணம், எங்கள் வலைப் பக்கங்களில் வீடியோக்கள், செய்தி உள்ளடக்கம் அல்லது இதர விளம்பர நெட்வொர்க்குகள் வழங்கியுள்ள விளம்பரங்கள் போன்ற மூன்றாம் நபர்களின் உள்ளடக்கம் அல்லது விளம்பரங்கள் இடம்பெற்றுள்ளன. ஏனெனில் உங்கள் உலவி மூன்றாம் நிலை நபர்கள் உங்கள் வன் தட்டில் தங்களது சொந்த குக்கீகளை வைக்கவும், படிக்கவும் அனுமதிக்கும்படியான உள்ளடக்கத்தை பெற அந்த மூன்றாம் நிலை நபர்களின் இணைய சர்வர்களுடன் இணைக்கும்.
குக்கீகளை கட்டுப்படுத்துவது எப்படி
எடுத்துக்காட்டாக, இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 9-ல், நீங்கள் பின்வரும் படிகள் மூலம் குக்கீகளை தடை செய்யலாம்:
மற்ற உலவிகளில் குக்கீகளை அழிப்பதற்கான விவரங்கள் http://www.allaboutcookies.org/manage-cookies/ என்ற வலைத்தளத்தில் (ஆங்கிலத்தில்) கிடைக்கும்.
நீங்கள் குக்கீகளை நிராகரிக்கத் தேர்வு செய்தால், உள்நுழைய முடியாமலோ, குக்கீகளைச் சார்ந்துள்ள மைக்ரோசாஃப்ட் தளங்கள் மற்றும் சேவைகளின் தனிச்சிறப்பு அம்சங்களைப் பயன்படுத்த முடியாமலோ போகலாம், மேலும் குக்கீகளைச் சார்ந்துள்ள சில விளம்பர முன்னுரிமைகளைப் பயன்படுத்த முடியாமல் போகலாம்.
எடுத்துக்காட்டாக, இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 9-ல், நீங்கள் பின்வரும் படிகள் மூலம் குக்கீகளை அழிக்கலாம்:
மற்ற உலவிகளில் குக்கீகளை அழிப்பதற்கான விவரங்கள் http://www.allaboutcookies.org/manage-cookies/என்ற வலைத்தளத்தில் கிடைக்கும்.
நீங்கள் குக்கீகளை நீக்கத் தேர்வு செய்தால், விளம்பர முன்னுரிமைகள் உட்பட, குக்கீகளால் கட்டுப்படுத்தப்படும் அமைப்புகள் மற்றும் முன்னுரிமைகள் அனைத்தும் நீக்கப்படும் மற்றும் அவற்றை மீண்டும் உருவாக்க வேண்டியிருக்கலாம் என்பதை தயவுசெய்து தெரிந்துகொள்ளலாம்.
”தடமறிய வேண்டாம்” மற்றும் தடமறிதல் பாதுகாப்பிற்கான உலவி கட்டுப்பாடுகள். சில புதிய உலவிகள் “தடமறிய வேண்டாம்” அம்சங்களுடன் உள்ளன. இந்த அம்சங்களில் பெரும்பாலானவை, இயக்கப்பட்டவுடன், நீங்கள் வருகை தரும் இணையதளங்களுக்கு நீங்கள் தடமறிய விரும்பாததை சுட்டிக்காட்டி ஒரு சமிக்கை அல்லது விருப்பத்தேர்வை அனுப்பும். அந்த தளங்களில் (அல்லது அந்த தளங்களில் உள்ள மூன்றாம் தரப்பு உள்ளடக்கம்) தளங்களின் அந்தரங்க நடைமுறைகளின் அடிப்படையில் இந்த விருப்பத்தேர்வை வெளியிட்டிருந்தாலும் கூட தொடர்ந்து செயல்பாடுகள் தடமறியப்படலாம்.
இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 9 மற்றும் 10 ஆகியவை தடமறிதல் பாதுகாப்பு எனப்படும் அம்சத்தை பெற்றுள்ளன, இது நீங்கள் செல்லும் இணையதளங்களில் மூன்றாம் தரப்பு உள்ளடக்க வழங்குநர்களுக்கு உங்கள் வருகை பற்றிய விவரங்கள் தானாக அனுப்பப்படுவதை தடை செய்ய உதவுகின்றது. ஒரு தடமறிதல் பாதுகாப்புப் பட்டியலை நீங்கள் சேர்க்கும்போது, இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் குக்கீகள் உள்ளிட்ட மூன்றாம் தரப்பு உள்ளடக்கத்தை, தடை செய்யப்பட வேண்டுமென பட்டியலிடப்பட்டுள்ள தளங்களில் தடை செய்யும். இந்த தளங்களில் அழைப்புகளுக்கு வரம்பிடுவதன் மூலம், இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் உங்களை பற்றியவற்றை மூன்றாம் தரப்புத் தளங்கள் சேகரிக்கும் விவரங்களுக்கு வரம்பிடுகிறது. ஒரு தடமறிதல் பாதுகாப்பு பட்டியல் இயக்கப்படும்போது, இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் நீங்கள் வருகை செய்யும் இணையதளங்களுக்கு தடமறிய வேண்டாம் சமிக்கை அல்லது விருப்பத் தேர்வை அனுப்பும். கூடுதலாக, இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 10ல் நீங்கள் விரும்பினால் DNT-ஐ தன்னிச்சையாக “நிறுத்து“ அல்லது “இயக்கு” நிலைக்கு மாற்றிக் கொள்ளலாம். ட்ரேக்கிங் ப்ரொட்டக்ஷன் லிஸ்ட்டுகள் மற்றும் ‘டு நாட் ட்ரேக்’ ஆகியவை குறித்த மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பிரைவசி ஸ்டேட்மெண்ட் அல்லது இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் ‘ஹெல்ப்’ பகுதியை பார்க்கவும்.
மேலும், தனிப்பட்ட விளம்பர நிறுவனங்கள் தங்களுக்கு சொந்தமான விலகிக்கொள்ளல் வசதிகளையும் மேலும் நவீன விளம்பரத் தெரிவுகளையும் வழங்கலாம். எடுத்துக்காட்டாக, மைக்ரோசாஃப்ட் விளம்பர விருப்பங்களும் விலகிக்கொள்ளல் கட்டுப்பாடுகளும் http://choice.live.com/advertisementchoice/ என்ற வலைத்தளத்தில் உள்ளன.. நீங்கள் இலக்குரீதியான விளம்பரப்படுத்துதலை தேர்ந்தெடுத்தால், விளம்பரங்களை நீங்கள் பெறுவது நின்று விடும் என்றோ அல்லது குறைந்த விளம்பரங்கள் நீங்கள் காண்பீர்கள் என்றோ பொருளல்ல. இருப்பினும், நீங்கள் விலகிக் கொண்டால், நீங்கள் பெறும் விளம்பரங்கள் இலக்குரீதியானவையாக இருக்காது மேலும் உங்கள் விருப்பங்களுக்கு ஏற்றவைகளாக இருக்காது. கூடுதலாக, விலகிக் கொள்ளுதல் என்பது எங்கள் சர்வர்களிலிருந்து செல்லும் விவரங்களை நிறுத்தாது, ஆனால் இலக்கு விளம்பரப்படுத்துதலுக்காக பயன்படுத்தப்படும் விவரங்களை உருவாக்குதல் அல்லது புதுப்பித்தலை அது நிறுத்திவிடும்.
வலை பீக்கான்களின் பயன்பாடு
மைக்ரோசாஃப்ட் வலைப் பக்கங்கள், வலை பீக்கான்கள் எனப்படும் மின்னணு படங்களைக் கொண்டுள்ளன – சில வேளைகளில் ஒற்றை-பிக்ஸல் ஜிஃப்கள் என அழைக்கப்படும் – அவை எங்கள் தளங்களில் குககீகளை வழங்குவதில் உதவப் பயன்படுத்தப்படலாம், எத்தனை பயனர்கள் அந்த பக்கத்தைப் பார்வையிட்டார்கள் என்ற எண்ணிக்கையைக் கண்டறிய எங்களுக்குப் பயன்படும், மேலும் இணை-வர்த்தக சேவைகளை வழங்கவும் பயன்படும். நாங்கள் பிரசார மின்னஞ்சல் செய்திகள் அல்லது செய்திமடல்களில், அவை திறக்கப்பட்டதா எனவும் செயல்படுத்தப்பட்டதா எனவும் தீர்மானிக்க அவற்றில் வலை பீக்கான்களைப் பயன்படுத்தலாம்.
மைக்ரோசாஃப்ட் தளத்தில் உள்ள ஒரு விளம்பரத்தை கிளிக் செய்வது எத்தனை முறை வாங்குவதில் முடிகிறது அல்லது விளம்பரம் செய்வோரின் தளத்தின் பிற செயல்பாடுகளில் முடிகிறது என்பது பற்றிய புள்ளிவிவரங்களை உருவாக்காக, மைக்ரோசாஃப்ட் வளைத்தளத்தில் விளம்பரம் செய்யும் நிறுவனங்கள் தங்கள் தளங்களில் வலை பீக்கான்களைப் பயன்படுத்தக்கூடிய நிறுவனங்களுடன் நாங்கள் பணிபுரியலாம்.
எங்கள் ஊக்குவிப்பு பிரசாரங்களின் செயல்திறன் குறித்த தொகுப்பு பிள்ளிவிவரங்களைத் தொகுப்பதிலோ அல்லது எங்கள் தளங்களின் பிற இயக்கங்களிலோ எங்களுக்கு உதவ, Microsoft மூன்றாம் தரப்பினரிடமிருந்து வலை பீக்கான்களை பயன்படுத்தலாம். இந்த இணைய வழிகாட்டிகளின் மூலம் மூன்றாம் தரப்பினர்கள் உங்கள் கணினியில் ஒரு குக்கீயை அமைக்கவோ வாசிக்கவோ அனுமதிக்கப்படலாம். உங்கள் தனிப்பட்ட தகவல்களை சேகரிப்பதற்கு அல்லது அணுகுவதற்காக மூன்றாம் தரப்பினர்கள் எங்கள் தளங்களில் உள்ள இணைய வழிகாட்டிகளைப் பயன்படுத்துவதை நாங்கள் தடை செய்கிறோம். எவ்வாறாயினும், பின்வரும் ஒவ்வொரு பகுப்பாய்வு வழங்குநர்களுக்கான சம்பந்தப்பட்ட இணைப்புகளை சொடுக்குவதன் மூலம் நீங்கள் இந்த மூன்றாம் தரப்புப் பகுப்பாய்வு நிறுவனங்களின் தரவுச் சேகரிப்பு அல்லது பிரயோகிப்பிலிருந்து விலகிக்கொள்ளலாம்.
ஒரே மாதிரியான தொழில்நுட்பங்கள்
தரநிலையான குக்கீஸ் மற்றும் இணைய வழிகாட்டிகளுடன் சேர்த்து, வலைத்தளங்கள் உங்கள் கணினியில் தரவுக் கோப்புகளை சேமிப்பதற்கும் வாசிப்பதற்கும் இதர தொழில்நுட்பங்களையும் பயன்படுத்த முடியும். இது, சில குறிப்பிட்ட கோப்புகளை உங்கள் கணினியிலேயே சேமிப்பதன் மூலம் உங்களுடைய விருப்பங்களை பராமரிப்பதற்காக அல்லது வேகம் மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதற்காக செய்யப்படலாம். ஆனால், தரநிலையான குக்கீஸ் போன்று, உங்கள் கணினிக்கான ஒரு தனிப்பட்ட அடையாளங்காட்டியை சேமிப்பதற்கும் இதை பயன்படுத்த முடியும்; பிறகு அதை பயன்படுத்தி நடத்தையை கண்டறிய முடியும். இந்த தொழில்நுட்பங்களில் உட்படுபவை: லோகல் ஷேர்டு ஆப்ஜெக்ட்ஸ் (அல்லது “ஃப்ளாஷ் குக்கீஸ்”) மற்றும் சில்வர்லைட் அப்ளிகேஷன் ஸ்டோரேஜ்.
லோகல் ஷேர்டு ஆப்ஜெக்ட்ஸ் அல்லது “ஃப்ளாஷ் குக்கீஸ்.” அடோப் ஃப்ளாஷ் தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் வலைத்தளங்கள் உங்கள் கணினியில் தரவுகளை சேமிக்க லோகல் ஷேர்டு ஆப்ஜெக்ட்ஸ் அல்லது “ஃப்ளாஷ் குக்கீஸ்” பயன்படுத்தலாம். ஃப்ளாஷ் குக்கீஸ் அகற்றுவதற்கான திறனை தரநிலையான குக்கீஸ் சார்ந்த பிரவுஸர் அமைத்தல் மூலம் கட்டுப்படுத்த முடியலாம் அல்லது முடியாமல் போகலாம், ஏனெனில் அது பிரவுஸரை பொறுத்து வேறுபடும், என்பதை கவனத்தில் கொள்ளவும். ஃப்ளாஷ் குக்கீகஸை நிர்வகிக்க அல்லது தடுக்க, http://www.macromedia.com/support/documentation/en/flashplayer/help/settings_manager.html.
சில்வர்லைட் அப்ளிகேஷன் ஸ்டோரேஜ். மைக்ரோசாஃப்ட் சில்வர்லைட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் வலைத்தளங்கள் அல்லது அப்ளிகேஷன்களால் சில்வர்லைட் அப்ளிகேஷன் ஸ்டோரேஜ் பிரயோகித்தும் தரவுகளை சேமிக்க முடியும். அத்தகைய சேமிப்பை எவ்வாறு நிர்வகிப்பது அல்லது தடுப்பது என்பது பற்றி அறிந்துகொள்ள, சில்வர்லைட் தளத்தை பார்க்கவும்பார்க்கவும்.
சிறந்த தயாரிப்புகள், சேவைகள் மற்றும் அனுபவங்களை எங்களால் முடிந்தளவுக்கு உங்களுக்கு வழங்குவதற்கும் சிறப்பாக இயக்கும் பொருட்டும் பல வகையான தகவலை Microsoft சேகரித்து வருகிறது.
எங்களது தளங்கள் மற்றும் சேவைகளில் நீங்கள் பதிவு செய்கையில், உள்நுழைகையில் மற்றும் பயன்படுத்துகையில் தகவலைச் சேகரிப்போம். நாங்கள் மற்ற நிறுவனங்களில் இருந்தும் தகவலைப் பெறுவோம்.
நாங்கள் உங்கள் கணினியில் அல்லது மற்ற சாதனத்தில் உள்ள குக்கிகள், வலை உள்நுழைவு மற்றும் மென்பொருள் போன்ற வலைப் படிவங்கள், தொழில்நுட்பங்கள் உள்ளடங்கிய பல வகையான வழிகளில் இந்த தகவலை நாங்கள் சேகரிப்போம்.
சிறந்த தயாரிப்புகள், சேவைகள் மற்றும் அனுபவங்களை எங்களால் முடிந்தளவுக்கு உங்களுக்கு வழங்குவதற்கும் சிறப்பாக இயக்கும் பொருட்டும் பல வகையான தகவலை Microsoft சேகரித்து வருகிறது. இந்த தகவலில் சிலவற்றை எங்களுக்கு நீங்கள் நேரடியாக வழங்குவீர்கள். இதன் சிலவற்றை எங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளுடன் நீங்கள் எவ்வாறு உடன் செயலாற்றுகிறீர்கள் என்பதைக் கவனிப்பதன் மூலம் பெறுவோம். இவற்றின் சில தகவல் நாங்கள் நேரடியாகச் சேகரிக்கும் தரவுடன் நாங்கள் ஒன்றிணைக்கும் மற்ற ஆதாரங்களில் இருந்து கிடைக்கும். ஆதாரம் எதுவாக இருப்பினும், அத்தகவலை கவனமாக நடத்துவதும் உங்கள் தனியுரிமையைப் பராமரிக்க உதவுவதும் முக்கியம் என்று நம்புகிறோம்.
நாங்கள் சேகரிப்பது என்ன:
நாங்கள் எவ்வாறு சேகரிக்கிறோம்:
நீங்கள் எங்கள் தளங்கள் மற்றும் சேவைகளை எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்பது பற்றிய தகவலைச் சேகரிக்க எண்ணற்ற முறைகளையும் தொழில்நுட்பங்களையும் பயன்படுத்துகிறோம், அவை:
நாங்கள் வழங்கும் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை இயக்குவதற்கு, மேம்படுத்துவதற்கு மற்றும் தனிப்பயன் செய்வதற்கு நாங்கள் சேகரிக்கும் தகவலை Microsoft பயன்படுத்துகிறது.
நாங்கள் உங்களுடன் தகவல்தொடர்பு கொள்வதற்கும் அத்தகவலைப் பயன்படுத்தலாம், உதாரணமாக, உங்கள் கணக்கு மற்றும் பாதுகாப்புப் புதுப்பித்தல்களைப் பற்றி உங்களுக்குத் தெரியப்படுத்துதல்.
எங்கள் விளம்பர-உதவி பெற்ற சேவைகளில் மிகவும் பொருத்தமான விளம்பரங்களை நீங்கள் பார்ப்பதற்கு உதவ தகவலை நாங்கள் பயன்படுத்தலாம்.
நாங்கள் வழங்கும் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை இயக்குவதற்கு, மேம்படுத்துவதற்கு மற்றும் தனிப்பயன் செய்வதற்கு நாங்கள் சேகரிக்கும் தகவலை Microsoft பயன்படுத்துகிறது. ஒரு Microsoft சேவை மூலம் சேகரிக்கப்பட்ட தகவலானது மற்ற Microsoft சேவைகளின் மூலமாகச் சேகரிக்கப்பட்ட தகவலுடன் ஒன்றிணைக்கப்படலாம், அதன் மூலம் எங்களுடனான உங்களுடைய செயல்பாடுகளில் ஒரு கூடுதல் தொடர்ச்சியான மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட அனுபவத்தை வழங்க முடியும். நாங்கள் மற்ற நிறுவனங்களில் இருந்து பெறும் தகவலுடனும் இதனை உடன் இணைக்கக்கூடும். எடுத்துக்காட்டுக்கு, சில குறிப்பிட்ட தனிப்பயனாக்கப்பட்ட சேவைகளை உங்கள் IP முகவரியின் அடிப்படையிலான ஒரு நிலவியல் பகுதியை வருவிக்க, பிற நிறுவனங்களின் சேவையை நாங்கள் பயன்படுத்தலாம்.
உங்களுடன் தகவல்தொடர்பு கொள்ள அத்தகவலை நாங்கள் பயன்படுத்தக்கூடும், உதாரணமாக, ஒரு சந்தா முடிவடைகையில் உங்களுக்குத் தெரியப்படுத்த, பாதுகாப்புப் புதுப்பித்தல்கள் இருக்கையில் உங்களுக்குத் தெரியப்படுத்துதல் அல்லது உங்கள் கணக்கை இயக்கத்தில் வைப்பதற்கு நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டியது பற்றி தெரியப்படுத்துதல்.
எங்கள் தளங்கள் மற்றும் சேவைகளில் பலவற்றை Microsoft கட்டணமின்றி இலவசமாக வழங்குகிறது, ஏனென்றால் அவை விளம்பரப்படுத்துதலால் ஆதரிக்கப்படுகின்றன. இந்த சேவைகளைப் பரவலாகக் கிடைக்கச் செய்யும் பொருட்டு, நாங்கள் சேகரிக்கும் தகவலானது நீங்கள் காணும் விளம்பரங்களை உங்களுக்கு மிகவும் பொருத்தமானவையாக ஏற்படுத்துவதற்கு உதவ பயன்படுத்தப்படலாம்.
இந்த தனியுரிமை அறிக்கையில் விவரிக்கப்பட்டது தவிர்த்து, உங்கள் ஒப்புதல் இல்லாமல் ஒரு மூன்றாம் தரப்பினருடன் உங்கள் தனிப்பட்ட தகவலை நாங்கள் வெளியிடமாட்டோம்.
நாங்கள் Microsoft துணைச்சேவைகள் மற்றும் வியாபாரிகள் உள்ளிட்டவர்களுடன்; சட்டத்திற்கு உட்பட்டு அல்லது சட்ட நடைமுறைகளுக்குப் பதிலளிக்கையில்; மோசடிகளை எதிர்க்கையில் அல்லது எங்கள் ஆர்வத்தைப் பாதுகாக்கையில்; அல்லது வாழ்க்கையைப் பாதுகாக்கையில், தகவலை நாங்கள் எப்பொழுது வெளியிடலாம் என்பது பற்றிய விபரங்களை வேறு முக்கியத் தனியுரிமைத் தகவல் என்பதில் காணவும்.
தனிப்பட்ட தகவலை பகிர்வது அல்லது வெளியிடுவது பற்றிய கூடுதல் தகவலுக்கு இங்கே கிளிக் செய்யவும்:
சில Microsoft சேவைகள் உங்கள் தனிப்பட்ட தகவலை ஆன்லைனில் காணவும் அல்லது திருத்தவும் உதவுகிறது. உங்கள் தனிப்பட்ட தகவலை மற்றவர்கள் காண்பதைத் தடுக்க உதவ, நீங்கள் முதலில் உள்நுழைய வேண்டியதிருக்கும். நீங்கள் பயன்படுத்திய தளங்கள் அல்லது சேவைகளைப் பொருத்தே உங்கள் தனிப்பட்ட தகவலை நீங்கள் எவ்வாறு அணுகலாம் என்பது அமையும்.
Microsoft.com - - உங்கள் சுயவிவரத்தை நீங்கள், Microsoft.com சுயவிவர மையத்தை பார்வையிடுவதன் மூலம் அணுகி, புதுப்பிக்கலாம்.
Microsoft Billing மற்றும் Account Services - - உங்களிடம் ஒரு Microsoft Billing கணக்கு இருந்தால், Microsoft Billing வலைத்தளத்தில் "தனிப்பட்ட தகவல்" அல்லது "பில்லிங் தகவல்" இணைப்புகளைக் கிளிக் செய்வதன் மூலம் உங்கள் தகவலைச் சேர்க்கலாம் மற்றும் புதுப்பிக்கலாம்.
Microsoft Connect - - நீங்கள் Microsoft Connect இன் பதிவு பெற்ற பயனராக இருந்தால், நீங்கள் Microsoft Connect வலைத்தளத்தில், உங்கள் Connect சுயவிவரத்தை நிர்வகிக்கவும் என்பதைக் கிளிக் செய்வதன் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவலை அணுகலாம் மற்றும் புதுப்பிக்கலாம்.
MSN & Windows Live - நீங்கள் Windows Live சேவைகளைப் பயன்படுத்தியிருந்தால், Windows Live Account Servicesஐ பார்வையிடுவதன் மூலம் நீங்கள், உங்கள் சுயவிவர தகவலைப் புதுப்பிக்கலாம், கடவுச்சொல்லை மாற்றலாம், உங்கள் நம்பிக்கை சான்றுகளுடன் இணைந்த தனித்துவமான ID ஐ காணலாம் அல்லது குறிப்பிட்ட கணக்குகளை மூடலாம்.
Windows Live பொது சுயவிவரம் - நீங்கள் Windows Live இல் பொது சுயவிவரத்தை உருவாக்கியிருந்தால், Windows Live சுயவிவரத்துக்குச் சென்று, உங்கள் பொது சுயவிவரத்தில் உள்ள தகவலைத் திருத்தவோ நீக்கவோ முடியும்.
தேடல் விளம்பரம் - Microsoft Advertising மூலம் தேடல் விளம்பரத்தை நீங்கள் வாங்கினால், Microsoft adCenter வலைத்தளத்தில் உங்கள் தனிப்பட்ட தகவலை மறுஆய்வு செய்து திருத்திக் கொள்ளலாம்.
Microsoft Partner Programs - நீங்கள் Microsoft Partner Programs உடன் பதிவு பெற்றிருந்தால். Partner Program வலைத்தளத்தில் உங்கள் கணக்கை நிர்வகிக்கவும் என்பதைக் கிளிக் செய்வதன் மூலம் உங்கள் சுயவிவரத்தை மறுஆய்வு செய்யலாம் மற்றும் திருத்தலாம்.
Xbox - நீங்கள் ஒரு Xbox LIVE அல்லது Xbox.com பயனராக இருந்தால், Xbox 360 கன்ஸோல் அல்லது Xbox.com வலைத்தளத்தில் உள்ள My Xboxஐ அணுகுவதன் மூலம் பில்லிங் மற்றும் கணக்கு விபரம், தனியுரிமை அமைப்புகள், ஆன்லைன் பாதுகாப்பு மற்றும் தரவுப் பகிர்வு முன்னுரிமைகள் உள்ளிட்டவற்றில் உங்கள் தனிப்பட்ட தகவலைக் காணலாம் அல்லது திருத்தலாம். கணக்குத் தகவலுக்கு My Xbox, Accounts தேர்ந்தெடுக்கவும். மற்ற தனிப்பட்ட தகவல் அமைப்புகளுக்கு, My Xbox, அதன் பின் Profile, பிறகு ஆன்லைன் பாதுகாப்பு அமைப்புகள் தேர்ந்தெடுக்கவும்.
Zune - உங்களிடம் ஒரு Zune கணக்கு அல்லது ஒரு Zune Pass சந்தா இருந்தால், உங்கள் தனிப்பட்ட தகவலை Zune.netஇல் (உள்நுழையவும், உங்கள் Zune குறியை அணுகவும், அதன் பின் My Account) அல்லது Zune மென்பொருளில் காணலாம் அல்லது திருத்தலாம் (உள்நுழையவும், உங்கள் Zune குறியை அணுகவும் , அதன் பின் Zune.net சுயவிவரத்தைத் தேர்ந்தெடுக்கவும்).
மேலே உள்ள இணைப்புகள் மூலம் Microsoft தளங்கள் அல்லது சேவைகளால் சேகரிக்கப்பட்ட தனிப்பட்ட தரவை அணுக முடியாவிட்டால், இந்த தளங்கள் மற்றும் சேவைகள் உங்கள் தரவை அணுகுவதற்கான மற்ற வழிகளை வழங்கலாம். வலைப் படிவத்தைப் பயன்படுத்தி Microsoftஐ நீங்கள் அணுகலாம். 30 நாட்களுக்குள் உங்கள் தனிப்பட்ட தகவலை அணுகுவதற்கு அல்லது நீக்குவதற்கான கோரிக்கைகளுக்கு நாங்கள் பதிலளிப்போம்.
வயது விபரத்தை ஒரு Microsoft தளம் அல்லது சேவை சேகரிக்கையில், அது 13 வயதுக்குக் கீழே உள்ள பயனர்களைத் தடுக்கும் அல்லது ஒரு பெற்றோர் அல்லது காப்பாளரிடம் அவர்களது குழந்தை அதனைப் பயன்படுத்துவதற்கு முன் ஒப்புதல் பெறும்.
ஒப்புதல் வழங்கப்பட்டதும், அக்குழந்தையின் கணக்கு வேறு எந்த கணக்கைப் போலவும் நடத்தப்படுகிறது, அதில் மற்ற பயனர்களுடன் தொடர்பு கொள்ள முடிவதும் உள்ளடங்கும்.
இந்த தனியுரிமை அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி பெற்றோர்கள் தங்கள் ஒப்புதலை மாற்றலாம் அல்லது திரும்பப் பெறலாம்.
வயது விபரத்தை ஒரு Microsoft தளம் அல்லது சேவை சேகரிக்கையில், அது 13 வயதுக்குக் கீழே உள்ள பயனர்களைத் தடுக்கும் அல்லது ஒரு பெற்றோர் அல்லது காப்பாளரிடம் அவர்களது குழந்தை அதனைப் பயன்படுத்துவதற்கு முன் ஒப்புதல் பெறும். சேவையை வழங்குவதற்கான அவசியம் இல்லாமல் கூடுதல் தகவலை வழங்கும்படி 13 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளிடம் தெரிந்தே கேட்கமாட்டோம்.
ஒப்புதல் வழங்கப்படுகையில், குழந்தையின் கணக்கு வேறு எந்த கணக்கையும் போலவே நடத்தப்படும். மின்னஞ்சல், உடனடி செய்தி மற்றும் ஆன்லைன் செய்திப் பலகங்கள் போன்ற தகவல் பரிமாற்ற சேவைகளைக் குழந்தையால் அணுக முடியும், அதோடு அனைத்து வயதினப் பயனர்களுடனும் தடையின்றி தொடர்பு கொள்ள முடியும்.
பெற்றோர்கள், முன்னர் உருவாக்கப்பட்ட ஒப்புதல் நிலைகளைத் திரும்பப்பெறலாம், தங்கள் குழந்தைகளின் தனிப்பட்ட தகவலை மதிப்பாய்வு செய்யலாம், திருத்தலாம் அல்லது நீக்கக் கோரலாம். உதாரணமாக, Windows Liveஇல், பெற்றோர்கள் தங்கள் கணக்கிற்குச் சென்று "Parental Permissions" என்பதில் கிளிக் செய்ய வேண்டும்.
Microsoft தளங்கள் மற்றும் சேவைகளில் உள்ள ஆன்லைன் விளம்பரங்களில் பல Microsoft Advertising -ஆல் காட்சிப்படுத்தப்படுகின்றன. நாங்கள் உங்களுக்கு ஆன்லைன் விளம்பரங்களைக் காட்சிப்படுத்தும் போது, உங்களுக்கு ஒரு விளம்பரம் காண்பிக்கப்படுகையில் உங்கள் கணினியைக் கண்டறியும் பொருட்டு ஒன்று அல்லது அதிகமான குக்கிகளை உங்கள் கணினியில் வைப்போம். காலப்போக்கில், நாங்கள் விளம்பரங்கள் சேவை செய்யும் தளங்களில் இருந்து தகவலைச் சேகரித்து கூடுதல் பொருத்தமான விளம்பரங்களை வழங்குவதற்கு உதவ அத்தகவலைப் பயன்படுத்துவோம்.
எங்களது விருப்பம்-நீக்கு பக்கத்துக்கு வருகை புரிந்து Microsoft Advertisingஇல் இருந்து இலக்காக்கப்பட்ட விளம்பரங்களைப் பெறுவதில் இருந்து விருப்பம் நீக்கிக்கொள்ளலாம்.
எங்களது வலைத் தளங்கள் மற்றும் ஆன்லைன் சேவைகளில் பல விளம்பரப்படுத்தலால் ஆதரிக்கப்படுகின்றன.
Microsoft தளங்கள் மற்றும் சேவைகளில் உள்ள ஆன்லைன் விளம்பரங்களில் பல Microsoft Advertising -ஆல் காட்சிப்படுத்தப்படுகின்றன. நாங்கள் உங்களுக்கு ஆன்லைன் விளம்பரங்களைக் காட்சிப்படுத்தும்போது, நாங்கள் ஒவ்வொரு முறை உங்களுக்கு விளம்பரத்தைக் காண்பிக்கும் போதும், உங்கள் கணினியை அடையாளம் காண்பதற்காக ஒன்று அல்லது மேற்பட்ட நிரந்தர குக்கீகளை உங்கள் கணினியில் வைப்போம். எங்களது சொந்த வலைத் தளங்களோடு கூட எங்களது விளம்பரம் மற்றும் பதிப்பிக்கும் பார்ட்னர்களின் வலைத்தளங்களிலும் விளம்பரங்களை நாங்கள் சேவிப்பதால், உங்கள் கணினிக்கு வருகை செய்யும் அல்லது பார்க்கும் உங்களுடைய அல்லது மற்றவர்களுடைய பக்கங்கள், உள்ளடக்கம் மற்றும் விளம்பரங்களின் வகைகளைப் பற்றிய தகவலை எங்களால் காலப்போக்கில் தொகுக்க முடிகிறது. இத்தகவல் பல நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது, உதாரணமாக, நீங்கள் ஒரே விளம்பரங்களை மீண்டும் மீண்டும் பார்க்காமல் இருப்பதை உறுதிசெய்ய எங்களுக்கு உதவுகிறது. உங்களுக்கு விருப்பமாக இருக்கலாம் என நாங்கள் நம்பும் இலக்காக்காப்பட்ட விளம்பரங்களைத் தேர்ந்தெடுத்துக் காட்சிப்படுத்த உதவுவதற்கும் இத்தகவலை நாங்கள் பயன்படுத்துகிறோம்.
எங்களது விருப்பம்-நீக்கு பக்கத்துக்கு வருகை புரிந்து Microsoft Advertisingஇல் இருந்து இலக்காக்கப்பட்ட விளம்பரங்களைப் பெறுவதில் இருந்து விருப்பம் நீக்கிக்கொள்ளலாம். Microsoft Advertising தகவலை எவ்வாறு சேகரித்துப் பயன்படுத்துகிறது என்பது பற்றிய கூடுதல் தகவலுக்கு, Microsoft Advertising தனியுரிமை அறிக்கையைக் காணவும்.
எங்களது தளங்களில் விளம்பரங்களைக் காட்சிப்படுத்த மற்ற விளம்பர நெட்வொர்க்குகள் உள்ளிட்ட மூன்றாம்-தரப்பு விளம்பர நிறுவனங்களையும் நாங்கள் அனுமதிக்கிறோம். சில நேரங்களில், இந்த மூன்றாம் தரப்பினர்களும் உங்கள் கணினியில் குக்கிகளை வைக்கலாம். இந்த நிறுவனங்களில் தற்போது உள்ளடங்குபவை கீழே உள்ளன ஆனால் இவை மட்டுமே அல்ல: 24/7 Real Media, adblade, AdConion, AdFusion, Advertising.com, AppNexus, Bane Media, Brand.net, CasaleMedia, Collective Media, InMobi, Interclick, Jumptap, Millennial Media, Nugg.ad AG, Mobclix, Mojiva, SpecificMedia, Tribal Fusion, ValueClick, Where.com, Yahoo!, YuMe, Zumobi.இந்த நிறுவனங்கள் அவர்களின் குக்கீகளின் அடிப்படையில் இலக்கமைக்கப்படும் விளம்பரங்களிலிருந்து அதிக பலனைப் பெற உங்களுக்கு வழி செய்யலாம். மேலே உள்ள நிறுவனங்களின் பெயர்களைக் கிளிக் செய்து அந்த ஒவ்வொரு நிறுவனங்களின் வலைத்தளங்களுக்கான இணைப்புகளைப் பின்பற்றுவதன் மூலம் மேலும் தகவலறியலாம். அவர்களுள் பல நெட்வொர்க் அட்வர்டைசிங் இனிசியேடிவ் அல்லது டிஜிட்டல் அட்வர்டைசிங் கூட்டணியின் உறுப்பினர்களாகவும் இருக்கிறார்கள், அவை ஒவ்வொன்றும் பங்கேற்கும் நிறுவனங்களில் இருந்து இலக்காக்கப்படும் விளம்பரங்களை விருப்பம் நீக்குவதற்கான ஒரு எளிய வழியை வழங்குகின்றன.
நீங்கள் பெறும் மின்னஞ்சலில் உள்ள குறிப்பிட்ட வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், நீங்கள் எதிர்காலத்தில் Microsoft தளங்கள் மற்றும் சேவைகளிடமிருந்து வரும் பிரசார மின்னஞ்சலை நிறுத்தலாம். அந்தந்த சேவையைப் பொறுத்து, குறிப்பிட்ட மைக்ரோசாஃப்ட் தளங்கள் அல்லது சேவைகளுக்கான விளம்பர மின்னஞ்சல், தொலைபேசி அழைப்புகள், மற்றும் தபால் அஞ்சல் ஆகியவற்றைப் பெறுவது குறித்து முன்கூட்டியே தெரிவுகள் செய்வதற்கான வசதியும் உங்களுக்கு இருக்கலாம்.
நீங்கள் தற்போது எங்களிடமிருந்து விளம்பர மின்னஞ்சல்களைப் பெற்றுவருகிற போதிலும்றீர்கள் ஆனால் எதிர்காலத்தில் அவற்றைப் பெற விரும்பாவிட்டால், அந்த செய்தியில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் நீங்கள் அதை மேற்கொள்ள முடியும்.
நீங்கள் பின்வரும் பக்கங்களைப் பார்வையிட்டு உள்நுழைவதன் மூலம், சில Microsoft தளங்கள் மற்றும் சேவைகளிடமிருந்து பெறக்கூடிய பிரசார மின்னஞ்சல், தொலைபேசி அழைப்புகள் மற்றும் தபால் அஞ்சல் ஆகியவற்றைப் பெறுவது குறித்த முன் நடவடிக்கை தேர்வுகளைச் செய்து கொள்ளும் வசதியையும் பெறலாம்:
இந்த தெரிவுகள் இணைய விளம்பரங்கள் தோன்றுவதற்கு பொருந்தாது: தயவுசெய்து இந்த விஷயம் குறித்த தகவல்களுக்கு, ”விளம்பரங்கள் தோன்றுதல் (விலகிக் கொள்ளுதல்)” என்ற பகுதியை பார்க்கவும். நீங்கள் சேவையை ரத்து செய்யாத வரை, கால முறைப்படி நீங்கள் பெறக்கூடிய Microsoft இன் பகுதியாகக் கருதப்படும் சில குறிப்பிட்ட சேவைகளின் அத்தியாவசிய தகவலைப் பெறுதலுக்கும் இவை பொருந்தாது.
Microsoft கணக்கு (இதற்குமுன்பு Windows Live ID மற்றும் Microsoft Passport என அழைக்கப்பட்டது) என்பது Microsoft தயாரிப்புகள், வலைத்தளங்கள் மற்றும் சேவைகளுக்கும், குறிப்பிட்ட Microsoft பார்ட்னர்களுக்கும் உள்நுழைவதற்கு உங்களை அனுமதிக்கக்கூடிய ஒரு சேவையாகும். நீங்கள் ஒரு Microsoft கணக்கை உருவாக்குகையில், குறிப்பிட்ட தகவலை வழங்கும்படி நாங்கள் கேட்போம். உங்கள் Microsoft கணக்கைப் பயன்படுத்தி ஒரு தளம் அல்லது சேவைக்குள் உள்நுழைகையில், Microsoft கணக்குச் சேவையின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பைப் பாதுகாப்பதற்காகவும், கணக்கைத் தவறாகப் பயன்படுத்துவதில் இருந்து உங்களைப் பாதுகாப்பதற்கும் அந்த தளம் அல்லது சேவையின் சார்பாக உங்கள் அடையாளத்தைச் சரிபார்க்கும் பொருட்டு நாங்கள் தகவலைச் சேகரிப்போம். உங்கள் Microsoft கணக்குடன் நீங்கள் உள்நுழைந்திருக்கும் ஒரு தளம் அல்லது சேவைக்கும் குறிப்பிட்ட தகவலை நாங்கள் அனுப்புவோம்.
ஒரு Microsoft கணக்கை எவ்வாறு உருவாக்கிப் பயன்படுத்துவது, கணக்குத் தகவலை எவ்வாறு திருத்துவது, ஒரு Microsoft கணக்குடன் தொடர்புடைய தகவலை நாங்கள் எவ்வாறு சேகரித்துப் பயன்படுத்துகிறோம் என்பன உள்ளிட்ட கூடுதல் விபரங்களைக் காண Learn More என்பதில் கிளிக் செய்யவும்.
Microsoft கணக்கு (இதற்குமுன்பு Windows Live ID மற்றும் Microsoft Passport என அழைக்கப்பட்டது) என்பது Microsoft தயாரிப்புகள், வலைத்தளங்கள் மற்றும் சேவைகளுக்கும், குறிப்பிட்ட Microsoft பார்ட்னர்களுக்கும் உள்நுழைவதற்கு உங்களை அனுமதிக்கக்கூடிய ஒரு சேவையாகும். இதில் பின்வருபவை போன்ற தயாரிப்புகள், வலைத்தளங்கள் மற்றும் சேவைகள் அடங்கும்:
ஒரு Microsoft கணக்கை உருவாக்குதல்.
ஒரு மின்னஞ்சல் முகவரி, ஒரு கடவுச்சொல் மற்றும் ஒரு மாற்று மின்னஞ்சல் முகவரி, ஒரு தொலைபேசி எண், ஒரு கேள்வி மற்றும் ரகசிய பதில் போன்ற மற்ற "கணக்கு ஆதாரங்கள்" ஆகியவற்றை வழங்குவதன் மூலம் ஒரு Microsoft கணக்கை இங்கே உருவாக்கலாம். நாங்கள் உங்கள் "கணக்கு ஆதாரங்களைப்" பாதுகாப்புக் காரணங்களுக்காக மட்டுமே பயன்படுத்துவோம் - உதாரணமாக, உங்கள் Microsoft கணக்கை உங்களால் அணுக முடியாமல் உதவித் தேவைப்படும் நிலையில் உங்கள் அடையாளத்தைச் சரிபார்க்க, அல்லது உங்கள் Microsoft கணக்குடன் தொடர்புடைய மின்னஞ்சல் முகவரியை உங்களால் அணுக முடியாத போது உங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்கப் பயன்படுத்துவோம். சில சேவைகளில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டியிருக்கலாம், இந்த தருணங்களில் கூடுதல் பாதுகாப்புக் குறியீட்டை உருவாக்க உங்களை கேட்கலாம். உங்கள் Microsoft கணக்கிற்கு உள்நுழைய நீங்கள் பயன்படுத்தக்கூடிய மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல் ஆகியவை உங்களுடைய "நம்பிக்கைச் சான்றுகள்" ஆகும், அவற்றை எங்கள் நெட்வொர்க்கில் அங்கீகரிப்பதற்காக நீங்கள் பயன்படுத்துவீர்கள். மேலும், உங்கள் நம்பிக்கைச்சான்றுகள் மற்றும் அதன் சார்ந்த தகவலை அடையாளம் காணப்பயன்படும் ஒரு 64-பிட் தனித்துவமிக்க ID எண் உங்கள் நம்பிக்கைச்சான்றுகளுக்கு ஒதுக்கப்படும்.
ஒரு Microsoft கணக்கை நீங்கள் உருவாக்குகையில், பின்வரும் நபர்விபரத் தகவலை வழங்கும்படி நாங்கள் கேட்போம்: பாலினம்; நாடு; பிறந்ததேதி; மற்றும் அஞ்சல் குறியீடு. உள்ளூர் சட்டத்துக்கு ஏற்ப, ஒரு Microsoft கணக்கைப் பயன்படுத்துவதற்கு ஒரு பெற்றோர் அல்லது காப்பாளரிடம் இருந்து முறையான ஒப்புதலை குழந்தைப் பெறுவதைச் சரிபார்க்க பிறந்ததேதியை நாங்கள் பயன்படுத்தலாம். அதோடுகூட, இந்த நபர்விபரத் தகவலை எங்கள் ஆன்லைன் விளம்பரப்படுத்தல் முறைமைகள் பயன்படுத்தி உங்களுக்குப் பயனுள்ளதாகத் தோன்றக்கூடிய தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய தனிப்பயன் செய்யப்பட்ட விளம்பரங்களை வழங்கும், ஆனால் எங்களது விளம்பரப்படுத்தல் முறைமைகள் உங்கள் பெயர் அல்லது தொடர்பு தகவலைப் பெறுவதில்லை. வேறு சொற்களில் சொன்னால், உங்களை நேரடியாக அடையாளப்படுத்தக்கூடிய எந்த தகவலையும் எங்கள் விளம்பரப்படுத்தல் முறைமைகள் உள்ளடக்குவதில்லை அல்லது பயன்படுத்துவதில்லை (அதாவது உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி மற்றும் ஃபோன் எண்). நீங்கள் தனிப்பயனாக்கப்பட்ட விளம்பரங்களைப் பெற விரும்பாவிட்டால், இந்த பக்கத்துக்கு வருவதன் மூலம் உங்கள் Microsoft கணக்குடன் உங்கள் முன்னுரிமையை நீங்கள் பதிவு செய்து கொள்ளலாம், அதனால் Microsoft கணக்கின் மூலம் வலைத் தளங்கள் அல்லது சேவைகளுக்கு நீங்கள் எப்போது உள்நுழைந்தாலும், எங்கள் விளம்பரப்படுத்தல் முறைமைகள் உங்களிடம் தனிப்பயனாக்கப்பட்ட விளம்பரங்களைச் சேவிக்காது. விளம்பரப்படுத்தலுக்கான தகவலை Microsoft எவ்வாறு பயன்படுத்துகிறது என்பது பற்றிய கூடுதல் தகவலுக்கு, Microsoft விளம்பரப்படுத்தல் தனியுரிமை இணைச்சேர்க்கையைப் பார்க்கவும்.
Microsoftஆல் வழங்கப்பட்ட ஒரு மின்னஞ்சல் முகவரியை (அதாவது live.com, hotmail.com, அல்லது msn.com என முடிவடைபவை) அல்லது ஒரு மூன்றாம் தரப்பினரால் வழங்கப்பட்ட ஒரு மின்னஞ்சல் முகவரியை (அதாவது gmail.com அல்லது yahoo.com என முடிவடைபவை) உங்கள் Microsoft கணக்கிற்கு உள்நுழைகையில் நீங்கள் பயன்படுத்தலாம்.
ஒரு Microsoft கணக்கை உருவாக்குகையில், உங்கள் Microsoft கணக்குடன் தொடர்புடைய மின்னஞ்சல் முகவரியின் உரிமையாளர் நீங்கள் தான் என்பதைச் சரிபார்க்கும்படி கேட்கக்கூடிய ஒரு மின்னஞ்சலை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம். இது அந்த மின்னஞ்சல் முகவரியின் செல்லுபடியாகும் தன்மையைச் சரிபார்க்கவும் மின்னஞ்சல் முகவரிகளை உரிமையாளரின் அனுமதி இல்லாமல் பயன்படுத்துவதிலிருந்து தடுக்க உதவுவதற்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதுமுதல், உங்களது Microsoft தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் பயன்பாட்டுடன் தொடர்புடைய தகவல்தொடர்புகளை உங்களுக்கு அனுப்புவதற்கு அந்த மின்னஞ்சல் முகவரியை நாங்கள் பயன்படுத்துவோம்; உள்ளூர் சட்டத்தின்படி அனுமதிக்கப்படும் Microsoft தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய பிரச்சார மின்னஞ்சல்களையும் நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம். பிரச்சார தகவல்தொடர்புகளை நீங்கள் பெற்றுக் கொள்வது பற்றிய தகவலுக்கு, தகவல்தொடர்புகள் செல்லவும்.
ஒரு Microsoft கணக்கிற்கு நீங்கள் பதிவுசெய்ய முயற்சித்து உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பயனர் பெயராகக் கொண்டு வேறொரு நபர் ஏற்கனவே நம்பிக்கைச்சான்றுகளை உருவாக்கியிருந்தால், நீங்கள் எங்களைத் தொடர்புகொண்டு அந்த வேறு நபரை வேறொரு பயனர் பெயரை எடுத்துக்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளலாம், அதன் மூலம் உங்கள் நம்பிக்கைச் சான்றுகளை உருவாக்குகையில் உங்கள் மின்னஞ்சல் முகவரியையே நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
உங்கள் Microsoft கணக்குடன் மென்பொருள், தளங்கள் அல்லது சேவைகளுக்கு உள்நுழைதல்.
உங்கள் Microsoft கணக்கைப் பயன்படுத்தி ஒரு தளம் அல்லது சேவைக்குள் உள்நுழைகையில், Microsoft கணக்குச் சேவையின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பைப் பாதுகாப்பதற்காகவும், கணக்கைத் தவறாகப் பயன்படுத்துவதில் இருந்து உங்களைப் பாதுகாப்பதற்கும் அந்த தளம் அல்லது சேவையின் சார்பாக உங்கள் அடையாளத்தைச் சரிபார்க்கும் பொருட்டு நாங்கள் தகவலைச் சேகரிப்போம். உதாரணமாக, நீங்கள் உள்நுழைகையில், Microsoft கணக்குச் சேவையானது, உங்கள் நம்பிக்கைச் சான்றுகளுக்கு நியமிக்கப்பட்ட 64-பிட் தனித்துவமிக்க ஐடி எண், உங்கள் ஐபி முகவரி, உங்கள் வலை உலாவி பதிப்பு மற்றும் ஒரு நேரம் மற்றும் தேதி போன்ற உங்கள் நம்பிக்கைச்சான்றுகள் மற்றும் மற்ற தகவலைப் பெற்றுப் பதிவுசெய்கிறது. மேலும், நீங்கள் ஒரு சாதனத்திற்கு அல்லது ஒரு சாதனத்தில் நிறுவப்பட்டுள்ள மென்பொருளுக்குள் உள்நுழைய ஒரு Microsoft கணக்கைப் பயன்படுத்தினால், சாதனத்திற்கு ஒரு தற்போக்கான தனித்துவமிக்க ஐடி நியமிக்கப்படும்; இந்த தற்போக்கான தனித்துவமிக்க ஐடியானது உங்கள் Microsoft கணக்குடன் ஒரு தளம் அல்லது சேவையுடன் நீங்கள் தொடர்ந்து உள்நுழைகையில் Microsoft கணக்குச் சேவைக்கான உங்கள் நம்பிக்கைச் சான்றுகளின் பகுதியாக அனுப்பப்படும். Microsoft கணக்குச் சேவையானது நீங்கள் உள்நுழைந்திருக்கும் தளம் அல்லது சேவையுடன் பின்வரும் தகவலை அனுப்பும்: ஒரு உள்-நுழைவு அமர்வில் இருந்து அடுத்தது வரை உள்-நுழையும் ஒரே நபராக இருப்பது நீங்கள் தான் என்பதைக் குறிப்பிட அத்தளம் அல்லது சேவையை அனுமதிக்கும் ஒரு தனித்துவமிக்க ஐடி எண்; உங்கள் கணக்கிற்கு நியமிக்கப்பட்ட பதிப்பு எண் (உங்கள் உள்-நுழைவு தகவலை நீங்கள் ஒவ்வொரு முறை மாற்றுகையிலும் ஒரு புதிய எண் நியமிக்கப்படும்); உங்கள் மின்னஞ்சல் முகவரி உறுதிசெய்யப்படுகிறதா; உங்கள் கணக்கு செயலிழக்கப்பட்டதா.
உங்கள் Microsoft கணக்குடன் உள்நுழைவதற்கு உங்களை அனுமதிக்கும் சில மூன்றாம் தரப்பு தளங்கள் மற்றும் சேவைகளுக்கு அவற்றின் சேவைகளை வழங்குவதற்காக உங்கள் மின்னஞ்சல் முகவரி தேவை. அதுபோன்ற சூழ்நிலைகளில், நீங்கள் உள்நுழைகையில், Microsoft உங்கள் மின்னஞ்சல் முகவரியை வழங்கும் ஆனால் தளம் அல்லது சேவைக்கான உங்கள் கடவுச்சொல்லை அல்ல. இருப்பினும், அத்தளம் அல்லது சேவையுடன் உங்கள் நம்பிக்கைச்சான்றுகளை நீங்கள் உருவாக்கினால், உங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க அல்லது மற்ற உதவிச் சேவைகளை வழங்குவதற்கு உதவ உங்கள் நம்பிக்கைச் சான்றுகளுடன் தொடர்புடைய தகவலுக்கு அது வரையறை செய்யப்பட்ட அணுகலையே கொண்டிருக்கும்.
ஒரு பள்ளி, ஒரு வியாபாரம், ஒரு இணையச் சேவை வழங்குனர் அல்லது ஒரு நிர்வகிக்கப்பட்ட களத்தின் நிர்வாகி போன்ற ஒரு மூன்றாம் தரப்பினரிடம் இருந்து உங்கள் கணக்கை நீங்கள் பெற்றால், அந்த மூன்றாம் தரப்பினருக்கு உங்கள் கணக்கின் மீது உரிமைகள் ஏற்படலாம், அதில் உங்கள் கடவுச்சொல்லை மீட்டமைப்பதற்கான திறன், உங்கள் கணக்குப் பயன்பாடு அல்லது சுயவிவரத் தரவைப் பார்ப்பது, உங்கள் கணக்கின் உள்ளடக்கத்தைப் படிப்பது அல்லது சேமிப்பது, மற்றும் உங்கள் கணக்கை நிறுத்துதல் அல்லது ரத்துசெய்தல் போன்றவை உள்ளடங்கும். இந்த சூழ்நிலைகளில், நீங்கள் Microsoft சேவை ஒப்பந்தம் மற்றும் அந்த மூன்றாம் தரப்பினரின் எந்த கூடுதல் பயன்பாட்டு விதிகளுக்கும் உட்பட்டு இருக்கிறீர்கள். நீங்கள் ஒரு நிர்வகிக்கப்பட்ட களத்தின் நிர்வாகி என்றால் மற்றும் Microsoft கணக்குகளுடன் உங்கள் பயனர்களுக்கும் வழங்கியிருந்தால், அத்தகைய கணக்குகளுக்குள் இடம்பெறும் அனைத்து நடவடிக்கைக்கும் நீங்கள் தான் பொறுப்பு.
உங்கள் Microsoft கணக்கின் மூலம் உள்நுழைவதற்கு உங்களை அனுமதிக்கும் அந்த தளங்கள் மற்றும் சேவைகள் தங்களது தனியுரிமை அறிக்கைகளில் விவரிக்கப்பட்டபடி நீங்கள் வழங்கும் உங்கள் மின்னஞ்சல் முகவரி அல்லது தனிப்பட்ட தகவலைப் பயன்படுத்தலாம் அல்லது பகிரலாம். இருப்பினும், Microsoft கணக்குச் சேவையால் வழங்கப்பட்ட தனித்துவமிக்க ஐடி எண்ணை நீங்கள் கேட்டுக்கொண்ட ஒரு சேவை அல்லது பரிவர்த்தனையை நிறைவு செய்யும் பொருட்டு மூன்றாம் தரப்பினருடன் மட்டும் அவர்கள் பகிர்ந்து கொள்வார்கள். அனைத்து தளங்கள் மற்றும் சேவைகள் Microsoft கணக்கைப் பயன்படுத்த வெளியிடப்பட்ட தனியுரிமை அறிக்கையை வைத்திருக்க கோரப்படுகின்றனர், ஆனால் அந்த தளங்களின் தனியுரிமை நடைமுறைகளை கட்டுப்படுத்தவோ அல்லது கண்காணிக்கவோ முடியாது, மேலும் அவர்களின் தனியுரிமை அறிக்கைகள் வேறுபடும். ஒவ்வொரு தளம் அல்லது சேவையில் தகவலை எவ்வாறு சேகரித்துப் பயன்படுத்தலாம் என்பதைக் தீர்மானிக்க நீங்கள் உள்நுழையும் ஒவ்வொரு தளத்திற்கான தனியுரிமை அறிக்கையையும் நீங்கள் கண்டிப்பாக கவனமாகப் படிக்கவும்.
கணக்கிற்கு செல்வதன் மூலம் நீங்கள் உங்களின் தனிப்பட்ட தகவலை அணுகமுடியும். உங்களின் Microsoft கணக்கு ஒரு நிர்வகிக்கப்பட்ட டொமைனுக்குள் வராமலிருந்தால் உங்கள் பயனர் பெயரை நீங்கள் மாற்ற முடியும். நீங்கள் உங்கள் கடவுச்சொல், மாற்று மின்னஞ்சல் தொலைபேசி எண் மற்றும் கேள்வி மற்றும் ரகசியப் பதிலை எப்பொழுது வேண்டுமானாலும் மாற்றமுடியும். நீங்கள் கணக்கு என்பதற்கு சென்று அதன்பின் உங்கள் கணக்கை மூடவும் செல்வதன் மூலம் உங்கள் Microsoft கணக்கையும் நீங்கள் மூடிக்கொள்ளலாம். உங்கள் கணக்கு மேலே குறிப்பிட்டபடி ஒரு "நிர்வகிக்கப்பட்ட டொமைனில்" இருந்தால், உங்கள் கணக்கை மூட அங்கு சிறப்பு நடைமுறை இருக்கலாம். நீங்கள் ஒரு MSN அல்லது ஒரு Windows Live பயனர் என்றால், நீங்கள் கணக்குக்குச் சென்றால், நீங்கள் அந்த தளங்களுக்கான கணக்கிற்கு திருப்பி விடப்படுவீர்கள்.
Microsoft கணக்கு பற்றிய கூடுதல் தகவல் Microsoft கணக்கு வலைத்தளத்தில் கிடைக்கிறது.
இதைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள
கீழே நீங்கள் முக்கியமான கருதக்கூடிய (கருதாமல் இருக்கக்கூடிய) கூடுதல் அந்தரங்க விவரங்களைக் கண்டறியலாம். இவற்றில் பெரும்பாலானவை நாங்கள் உங்களுக்குத் தெரிவிக்க விரும்பும் பொதுவான நடைமுறைகள், ஆனால் அவை எங்கள் அந்தரங்க அறிக்கைகளில் அனைவருக்கும் முக்கியம் என சுட்டிக்காட்டப்படுவது அவசியம் என நினைக்க வேண்டாம். மேலும் இவற்றில் சில தெளிவாக குறிப்பிடப்படும் (எடுத்துக்காட்டாக, சட்டத்திற்கு தேவைப்படும் தகவல்களை அவசியமானபோது நாங்கள் வெளியிடுவோம்), ஆனால் எங்கள் வழக்கறிஞர்கள் நாங்கள் அதை கூறும்படிச் செய்கிறார்கள். இந்த விவரங்கள் எங்கள் நடைமுறைகளின் முழுமையான விவரிப்பு இல்லை என்பதை நினைவில் கொள்ளவும்-கூடுதலாக , நீங்கள் பயன்படுத்து மைக்ரோசாஃப்ட் தயாரிப்பு மற்றும் சேவை ஒவ்வொன்றிற்குமான அந்தரங்க அறிக்கையில் மிகவும் குறிப்பிட்ட விவரங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கும்.
இந்த பக்கத்தில்:
உங்கள் தனிப்பட்ட தகவலைப் பகிர்தல் மற்றும் வெளிப்படுத்துதல்
நீங்கள் பயன்படுத்தும் தயாரிப்பு அல்லது சேவைக்கான அந்தரங்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பகிர்தலுடன் கூடுதலாக, மைக்ரோசாஃப்ட் தனிப்பட்ட விவரங்களை பகிர்ந்து கொள்ளலாம் அல்லது வெளியிடலாம்:
உங்களின் தகவல் தொடர்புகளின் உள்ளடக்கம் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களையும் நாங்கள் பகிர்ந்து கொள்ளலாம் அல்லது வெளியிடலாம்:
மைக்ரோசாஃப்டின் அந்தரங்க நடைமுறைகள் மாறுபட்டுள்ள மூன்றாம் தரப்புத் தளங்களுடன் இணைப்புகளை எங்கள் தளங்கள் கொண்டிருக்கலாம் என்பதை கவனித்தில் கொள்ளவும். அந்த தளங்களில் ஏதேனும் தனிப்பட்ட விவரங்களை நீங்கள் வழங்கினால், உங்கள் விவரங்கள் அந்த தளங்களின் அந்தரங்க அறிக்கைகளின்படி நிர்வகிக்கப்படும். நீங்கள் வருகை தரும் தளம் எதுவாயினும் அதன் அந்தரங்க அறிக்கையை பார்வையிடுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம்.
தனிநபர் விவரங்களின் பாதுகாப்பைப் பாதுகாத்தல்
மைக்ரோசாஃப்ட் உங்களது தனிநபர் விவரங்களைப் பாதுகாப்பதில் உறுதி கொண்டிருக்கிறது. உங்கள் தகவலை அனுமதியின்றி அணுகுவது, பயன்படுத்துவது, அல்லது வெளிப்படுத்துவதைத் தடுப்பதற்கு நாங்கள் பல்வேறு வகையான பாதுகாப்புத் தொழில்நுட்பங்களையும் செயல்முறைகளையும் பயன்படுத்துகிறோம். எடுத்துக்காட்டாக, நீங்கள் அளிக்கும் தகவலை நாங்கள் வரம்புக்குட்பட்ட அணுகல் உள்ள, கட்டுப்படுத்தப்பட்ட நிலையங்களில் உள்ள கணினிச் சேவையகங்களில் சேமித்துவைக்கிறோம். மிகவும் ரகசியமான தகவல்களை (கடன் அட்டை எண் அல்லது கடவுச்சொல் போன்றவை) இணையத்தின் மூலம் நாங்கள் அனுப்பும் போது, செக்யூர் சாக்கெட் லேயர் (SSL) நெறிமுறை போன்ற உட்பொதிவைப் பயன்படுத்தி அதைப் பாதுகாக்கிறோம்.
உங்கள் கணக்குகளையும் தனிப்பட்ட தகவலையும் பாதுகாப்பதற்கு ஒரு கடவுச்சொல் பயன்படுத்தப்பட்டால், உங்கள் கடவுச்சொல்லை ரகசியமாக வைத்திருப்பது உங்கள் பொறுப்பாகும். இதை பகிர்ந்து கொள்ள வேண்டாம். உங்கள் கணினியை நீங்கள் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதானால், அடுத்த பயனரால் உங்கள் தகவலை அடுத்த பயனர் அணுகுவதிலிருந்து பாதுகாக்க, ஒரு கணினியை விட்டுச் செல்லும் முன், தளம் அல்லது சேவையை விட்டு வெளியேறிவிடுங்கள்.
விவரங்களை சேமித்து செயல்முறைப்படுத்தும் இடம்
மைக்ரோசாஃப்ட் தளங்கள் மற்றும் சேவைகளில் சேகரிக்கப்பட்ட தனிப்பட்ட தகவலானது, மைக்ரோசாஃப்ட் அல்லது அதன் துணை நிறுவனங்கள், இணை நிறுவனங்கள் அல்லது சேவை வழங்குநர்கள் வசதிகளைப் பராமரித்து வரும் அமெரிக்கா அல்லது பிற நாடுகளில் சேமிக்கப்பட்டு செயலாக்கப்படலாம். ஐரோப்பிய பொருளாதார பகுதி மற்றும் சுவிட்ஸர்லாந்து நாடுகளிலிருந்து தரவுகளை சேகரிப்பது, பயன்படுத்துவது, மற்றும் சேமித்துவைப்பது தொடர்பாக அமெரிக்க வணிகத் துறை முன்வைத்துள்ளதற்கு ஏற்ப அமெரிக்க-ஐரோப்பிய ஒன்றிய பாதுகாப்புத் துறைமுக நெறியமைப்பு மற்றும் அமெரிக்க-சுவிஸ் பாதுகாப்புத் துறைமுக நெறியமைப்பு ஆகியவற்றை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கடைப்பிடிக்கிறது. பாதுகாப்புத் துறைமுக நெறியமைப்பு குறித்து மேலும் அறிந்துகொள்வதற்கும் எங்கள் சான்றிதழை பார்ப்பதற்கும் தயவுசெய்து இந்த தளத்திற்கு வாருங்கள் http://www.export.gov/safeharbor/.
பாதுகாப்பான துறைமுக திட்டத்தில் மைக்ரோசாஃப்ட் பங்கேற்பின் ஒரு பகுதியாக, நாங்கள் TRUSTe பயன்படுத்துகிறோம்; இவர்கள், எங்களது செயற்கொள்கைகள் மற்றும் செயல் நடவடிக்கைகள் தொடர்பாக உங்களுக்கும் எங்களுக்கும் இடையிலுள்ள பிணக்குகளை தீர்ப்பதற்கான ஒரு சார்பற்ற மூன்றாம் தரப்பினர். நீங்கள் TRUSTe சேவையை தொடர்புகொள்வதற்கு தயவுசெய்து பின்வரும் வலைப்பக்கத்தை பார்க்கவும் https://feedback-form.truste.com/watchdog/request.
எங்கள் சட்ட கோரிக்கைகளுடன் இணங்கியிருத்தல், குறைகளை தீர்த்தல், எங்களது ஒப்பந்தங்களைச் செயல்படுத்துதல் போன்ற பல்வேறு காரணங்களுக்காகவும் மற்றும் சேவைகளை வழங்கும் அவசியம் இருக்கும் வரையும் மைக்ரோசாஃப்ட் உங்கள் தனிப்பட்ட விவரங்களை தன்னிடம் வைத்திருக்கும். உங்கள் தனிப்பட்ட விவரங்களை எப்படி அணுகுவது என்று மேலும் அறிந்துகொள்ள, உங்கள் விவரங்களை அணுகுதல் -க்கு வருகை செய்யவும்.
எங்களது தனியுரிமை அறிக்கையில் செய்யப்படும் மாற்றங்கள்
வாடிக்கையாளர் கருத்துக்களை பிரதிபலிக்கவும், எங்கள் சேவைகளில் மாற்றங்களை பிரதிபலிக்கவும் எங்கள் தனியுரிமை அறிக்கைகளை நாங்கள் அவ்வப்போது புதுப்பிப்போம். இந்த அறிக்கைக்கு நாங்கள் மாற்றங்கள் செய்யும் போது, இந்த அறிக்கையின் மேல் பகுதியில் உள்ள கடைசியாகப் "புதுப்பிக்கப்பட்ட தேதியை" மாற்றுவோம். இந்த அறிக்கை அல்லது மைக்ரோசாஃப்ட் உங்கள் தனிப்பட்ட தகவலை எவ்வாறு பயன்படுத்தும் என்பதில் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட்டால், மாற்றங்களைச் செயல்படுத்துவதற்கு முன், அந்த மாற்றத்தைப் பற்றிய அறிவிப்பை வெளியிடுவதன் மூலமாகவோ அல்லது நேரடியாக உங்களுக்கு ஒரு அறிவிப்பை அனுப்புவதன் மூலமாகவோ நாங்கள் உங்களுக்குத் தெரியப்படுத்துவோம். மைக்ரோசாஃப்ட் உங்கள் விவரங்களை எப்படி பாதுகாக்கிறது என அறிந்துகொள்ள நீங்கள் பயன்படுத்தும் தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கான தனியுரிமை அறிக்கைகளைத் தொடர்ந்து பார்வையிடுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம்.
எங்களை எவ்வாறு தொடர்பு கொள்வது
Microsoft Privacy, Microsoft Corporation, One Microsoft Way, Redmond, Washington 98052 USA
உங்கள் நாடு அல்லது மண்டலத்தில் உள்ள மைக்ரோசாஃப்ட் துணை நிறுவனத்தைக் கண்டறிய, http://www.microsoft.com/worldwide/ஐப் பார்க்கவும.
FTC தனியுரிமை முயற்சிகள்
வீட்டில் உள்ள பாதுகாப்பு
Trustworthy Computing